இந்தியாவில் கொரோனா தொற்று 27,892ஆக உயர்வு!
- IndiaGlitz, [Monday,April 27 2020]
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 லிருந்து 872 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914 லிருந்து 6,185 ஆக உயர்ந்துள்ளது என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 8,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
உலக அளவில் 2,994,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உலகம் முழுவதும் 206,992 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பதும் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 226,629 பேர்களும், இத்தாலியில் 197,675 பேர்களும், பிரான்ஸில் 162,100 பேர்களும், ஜெர்மனியில் 157,770 பேர்களும், இங்கிலாந்தில் 152,840 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது