இந்தியாவில் 26 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1500க்கும் மேல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 1554 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 29,20,905ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 54,256ஆகவும், உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் மட்டுமே உள்ளனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 54,256 பேர் கொரோனாவால் மரணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 223,759 என்றும் இத்தாலியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 195,351 என்றும், பிரான்ஸில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 161,488 என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout