இந்தியாவில் 26 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1500க்கும் மேல்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 1554 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 29,20,905ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 54,256ஆகவும், உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் மட்டுமே உள்ளனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 54,256 பேர் கொரோனாவால் மரணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 223,759 என்றும் இத்தாலியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 195,351 என்றும், பிரான்ஸில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 161,488 என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

More News

ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்?

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மே மூன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும்,

வடகொரியா அதிபர் இறந்துவிட்டாரா? சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தி

அமெரிக்காவுடன் அணு ஆயுத விஷயத்தில் மோதல் போக்கை கடைபிடித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும்

ரெளடி பேபி பாடலுக்கு அப்பாவுடன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில்

கொரோனா சிகிச்சையில் வென்டிலேட்டர்களின் பங்கு என்ன???

கொரோனா சிகிச்சைக்காக பல நாடுகள் வென்டிலேட்டர்களை இறக்குமதி செய்து வருகின்றன.

கொரோனா பரிசோதனை முடிவுகள் ஏன் தவறாக இருக்கின்றன???

இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் ரேபிட் கிட், RT-PCR என இரண்டு பரிசோதனை முறைகள் பிரதானமாகப் பயன்படுத்தப் படுகின்றன.