உலக அளவில் 26 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 26,38,024ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சம் பேர் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235ஆகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,21,734ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனாவுக்கு உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். இந்நாட்டில் 849,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 47,681 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்பெயினில் 208,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 21,717 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 187,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 25,085பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் 21,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 25,085 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் 150,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 5,315 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரை இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,450 என்றும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 681 என்றும், இதுவரை கொரோனாவில் இருந்து 4,373 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகக்குறைவாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு ஏமன். இங்கு ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.