இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? மத்திய சுகாதார அமைப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும் நாளுக்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது நாடு முழுவதும் 24,506 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்திருப்பதாகவும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் 5,063 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718லிருந்து 775ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,830,082 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் இதுவரை கொரோனாவால் 197,246 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் 925,038 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 52,185 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஸ்பெயினில் கொரோனாவால் 219,764 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 22,524பேர் பலியாகியுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 192,994 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 25,969 பேர் பலியாகியுள்ளதாகவும், பிரான்ஸில் கொரோனாவால் 159,828 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 22,245 பேர் பலியாகியுள்ளதாகவும், ஜெர்மனியில் கொரோனாவால் 154,999 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 5,760 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout