ராயபுரத்தில் எகிறிய கொரோனா: 5 மண்டலங்களில் 2000க்கும் மேல்

தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் அதிகளவில் சென்னையில் தான் இருப்பதால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ நெருங்கிவிட்டது

இந்த நிலையில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 22149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3859 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 2835 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2518 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2431பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2167பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1974 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1274 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1054பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், ஆகிய ஐந்து மண்டலங்களில் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அண்ணாநகர் மண்டலம் 2000ஐ தொடும் நிலையில் உள்ளது என்பதால் இந்த ஆறு மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

More News

கீர்த்தி சுரேஷூக்காக இணையும் த்ரிஷா, சமந்தா, மஞ்சுவாரியர், டாப்சி

நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார்

தினந்தோறும் புதிய உச்சம்: இன்று தமிழகத்தில் 1500க்கும் மேல் கொரோனா பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்டவர்களும், கடந்த ஒரு வாரமாக சென்னையில் 1000க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்

எனது உயிர்‌ மூச்சு இருக்கும்‌ வரை அதிமுக தொண்டனாக இருப்பேன்: பிரபல இயக்குனர் அறிக்கை

'இங்கிலீஷ்காரன்‌', 'மகாநடிகன்‌', 'சார்லி சாப்ளின்‌' உட்பட 20க்கும்‌ மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ள பிரபல திரைப்பட இயக்குனர்‌ ஷக்தி சிதம்பரம்‌ தற்போது யோகிபாபு நடிக்கும்‌ 'பேய்மாமா'

மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே அபராதம் விதித்து கொண்ட போலீஸ் ஐஜி

மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே ரூ.100 அபராதம் விதித்து கொண்ட போலீஸ் அதிகாரி ஐஜி அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மருத்துவ பில் கட்டாததால் கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட முதியவர்: அதிர்ச்சி தகவல்

80 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட சம்பவம்