ராயபுரத்தில் எகிறிய கொரோனா: 5 மண்டலங்களில் 2000க்கும் மேல்
- IndiaGlitz, [Monday,June 08 2020]
தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் அதிகளவில் சென்னையில் தான் இருப்பதால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ நெருங்கிவிட்டது
இந்த நிலையில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 22149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3859 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 2835 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2518 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2431பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2167பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1974 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1274 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1054பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், ஆகிய ஐந்து மண்டலங்களில் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அண்ணாநகர் மண்டலம் 2000ஐ தொடும் நிலையில் உள்ளது என்பதால் இந்த ஆறு மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.