மனிதம் வென்ற இடம்… உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மக்கள் செய்த காரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்களே மாஸ்கோ நகரில் நேற்று அணி வகுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.
முன்னதாக உக்ரைனில் இராணுவ ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, அந்நாடு நேட்டா அமைப்பில் இணையக் கூடாது எனக் கூறிக்கொண்டு உக்ரைனுக்குள்ளே நுழைந்த ரஷ்ய ராணுவம் அந்நாட்டின் விமான நிலையங்களையும் ஆயுதத் தளவாடங்களையும் அடித்தொழித்தது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைனுக்கு தற்போது சுவீடன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பெர்லின் போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் அதிபர் புடினுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களே அணி திரண்டிருக்கும் காட்சி பலருக்கும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று மறைந்த எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ப்சோவ்வின் 7 ஆவது நினைவுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திடீரென உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.
மேலும் போரை நிறுத்துங்கள் என்று புடினுக்கு எதிரான வாசகங்களையும் அந்த மக்கள் தங்களது கைகளில் ஏந்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களை அதிரடியாக கலைத்த அந்நாட்டு காவல்துறை கிட்டத்தட்ட 2,000 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதற்கு முன்பே உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகவும் இதுவரை 5,250 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களை அந்நாட்டு போலீசார் கலைய செய்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
St. Petersburg against the war pic.twitter.com/AUQPTVS3Nd
— NEXTA (@nexta_tv) February 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com