2 குழந்தை பெற்றுக் கொண்டால் அரசுபணி கிடையாதா? சர்ச்சையைக் கிளப்பும் புது சட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆட்சிக்காலம் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்குள் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவை கொண்டு வந்துவிடவேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முனைப்பு காட்டி வருகிறது.
இந்த வரைவு மசோதா தற்போது உத்திரப்பிரதேச மாநில மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய சட்ட வரைவின்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்டமும் கிடைக்காது. அதோடு அத்தகைய பெற்றோர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்கவும் முடியாது. மேலும் அவர்களுக்கு மாநில அரசு பணி கிடைக்காது. கூடவே அரசு பணியில் இருந்தால் பதவிஉயர்வும் எவ்வித மானியமும் கிடைக்காது எனப் பல அடுக்கடுக்கான விதிமுறைகள் கூறப்படுகின்றன.
இதனால் உ.பி மாநில அரசு கொண்டு வர நினைக்கும் புது மக்கள்தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவை பார்த்து பொதுமக்கள் பலரும் பீதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வரும் யோகி ஆதித்யநாத் அவர்கள், உ.பி மாநிலத்தில் வளங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் படிப்பறிவின்றி இருக்கும் மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதைக் குறித்து விழிப்புணர்வின்றி செயல்படுகின்றனர். இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே புது சட்ட வரைவு மசோதா கொண்டு வரப்பட வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments