10,000 போர்வீரர்களுடன் ஒரு போர்க்காட்சி.. 'பாகுபலி'யை மிஞ்சிவிடுமா தமிழ் திரைப்படம்?

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

ஹாலிவுட்டில் ஏராளமான போர் வீரர்களை வைத்து பெரும் பொருட்செலவில் போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவை பொறுத்த வரை போர் காட்சிகள் என்றால் ’பாகுபலி’ படத்தின் போர்க்காட்சிகள் தான் ஞாபகம் வரும் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படத்திலும் கிளைமாக்ஸில் ஒரு போர்காட்சி இருப்பதாகவும் அதில் 10,000 போர் வீரர்கள் கலந்து கொண்ட காட்சி படமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுகளாகவும் குறிப்பாக கிளைமாக்ஸில் சூர்யா மற்றும் பாபிதியோல் இடையே நடக்கும் ஒரு போர் காட்சி 10,000 துணை நடிகர்களை கொண்டு படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் சர்வதேச படங்களுக்கு இணையான காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படங்களில் ஒன்றாக ’கங்குவா’படம் இருக்கும் நிலையில் இந்த படம் இந்தியாவில் மட்டும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் ஓடிடியில் 30 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபிதியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, கேஎஸ் ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் பாத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.