அச்சுறுத்தும் டெங்கு… காஷ்மீரில் 1,000 ஆக உயர்ந்த பாதிப்பு!
- IndiaGlitz, [Saturday,November 06 2021]
மழைகாலத்தில் பரவும் தொற்றுநோயான டெங்கு தற்போது இந்தியா முழுக்க 9 மாநிலங்களில் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்நிலையில் ஜம்மு& காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
பருவமழை காலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 659 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏடிஎஸ் எனும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் பருவமழைக் காலத்தில் அதிகளவில் பரவுகிறது. நன்னீரில் மட்டுமே வளரும் இந்த கொசு நம்மைச் சுற்றியுள்ள நன்னீரில் உற்பத்தியாகி நமக்கே எமனாகவும் மாறிவிடுகிறது. எனவே வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு சுகாதாரத்தை பேணும்படி அனைத்து மாநகராட்சிகளும் அறிவுறுத்தி வருகின்றன.