காதலில்கூட தற்கெலை அதிகம்… ஆன்லைன் வகுப்பு குறித்து H.ராஜா ட்விட்!!!

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

 

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு உரிய விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என்று கல்வியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இணைய வசதியே இல்லாத மலைக் கிராமங்கள், ஏழை மாணவர்களின் நிலைமைக் குறித்தும் தொடர்ந்து கேள்வி  எழுப்பப் படுகிறது.

இதனால் ஒட்டுமொத்தமாக ஆன்லைன் வகுப்புகளையே ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 2 தற்கொலைச் சம்பவங்கள் நடைபெற்று கடும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களால் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான கருத்துகளும் வலுப்பெற்று வருகின்ன.

இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான ஹெச். ராஜா “காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா?” என்று ஆன்லைன் வகுப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஹர்பஜன்சிங் திடீர் விலகல் குறித்து சிஎஸ்கே சி.இ.ஓவின் பரபரப்பு டுவீட்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக இருக்கும் போல் தெரிகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக

சூர்யாவின் 'சிங்கம்' படத்தை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி!

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய பொலீஸ் அகடமி நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, சூர்யாவின் 'சிங்கம்' படத்தை மேற்கோள்காட்டி

கொழுந்தனுடன் கள்ளக்காதல், தட்டிக்கேட்ட கணவருக்கு செருப்படி: அதன்பின் நடந்த விபரீதம்

கொழுந்தனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்த இளம்பெண் ஒருவர் தட்டிக்கேட்ட கணவனை செருப்பால் அடித்ததால் ஏற்பட்ட விபரீதம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தின் அரியர் கேன்சல் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது… கிடுக்குப்பிடி காட்டும் AICTE!!!

கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கல்லூரி  கல்வி பயின்றுவரும் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

6000 கால்நடைகள், 40 பணியாளர்களுடன் நடுக்கடலில் மாயமான சரக்கு கப்பல்!!! பரபரப்பு தகவல்!!!

கிழக்கு சீனக் கடல்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மாயமானதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.