காதலில்கூட தற்கெலை அதிகம்… ஆன்லைன் வகுப்பு குறித்து H.ராஜா ட்விட்!!!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு உரிய விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என்று கல்வியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இணைய வசதியே இல்லாத மலைக் கிராமங்கள், ஏழை மாணவர்களின் நிலைமைக் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பப் படுகிறது.
இதனால் ஒட்டுமொத்தமாக ஆன்லைன் வகுப்புகளையே ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 2 தற்கொலைச் சம்பவங்கள் நடைபெற்று கடும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களால் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான கருத்துகளும் வலுப்பெற்று வருகின்ன.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான ஹெச். ராஜா “காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா?” என்று ஆன்லைன் வகுப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா?
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 4, 2020
- ஹெச்.ராஜா #OnlineClasses | #TNBJP | #HRaja pic.twitter.com/S7qOsLOrWx