இளையதளபதியின் 'தெறி'யில் டிஆர் பாடிய பாடல் : சிறப்பு தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 08 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு குத்து பாடலை பாடிவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே கடந்த வாரம் அறிவித்திருந்தோம்.


ரொமான்ஸ் கலந்த குத்து பாடலான இந்த பாடலை டி.ராஜேந்தருடன் இணைந்து சோனு கர்கார் என்ற பாடகியும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் 'ரங்கம்மா' என்ற வார்த்தையுடன் தொடங்குவதாக கூறப்படுகிறது. . இசைஞானி இளையராஜா இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்றும் இதே 'ராக்கம்மா' என்ற வார்த்தையுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.