நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்
- IndiaGlitz, [Saturday,August 29 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ உள்ளிட்ட படங்கள் ஏற்கனவே ஒடிடியில் ரிலீசாகி விட்டது என்பதும் த்ரிஷா நடித்த ’சதுரங்க வேட்டை 2’, அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் பெரிய பட்ஜெட் படமான சூரியாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படமும் ஒடிடியில் ரிலீஸாவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன
இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தபோது ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ் என்ற செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் திரையரங்குகள் திறப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் திரையரங்குகள் திறந்தவுடன் மட்டுமே இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறினார்
மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் என்றும் தெரிவித்தனர். எனவே நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ் இல்லை என்பதை படக்குழுவினர் மீண்டும் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது