நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ரிலீஸா? ஆர்ஜே பாலாஜியின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், தியேட்டரில்தான் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டது
அந்த வகையில் தற்போது இந்த படம் குறித்து ஆர்ஜே பாலாஜி பதிவு செய்துள்ள டுவீட் காரணமாக இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிகிறது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையை செய்துவரும் ஆர்ஜே பாலாஜி திடீரென தற்காலிகமாக அதிலிருந்து விலகி சென்னை திரும்பியுள்ளார். இன்னும் 20 நாட்களில் மீண்டும் ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளராக திரும்பிவிடுவேன் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
தற்போது ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் பணிகளை அவர் கவனிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளதை அடுத்து முதல் படமாக ஆர்ஜேபாலாஜியின் ’மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Thank you so much for this unbelievable love, appreciation and support for Tamil commentary.!!! ❤️❤️
— RJ Balaji (@RJ_Balaji) October 4, 2020
Blessed !!! I will be ‘coming back to cricket’ real soon !!! என்னங்க நீங்க..!?! 20 நாள் தாங்க!!! போங்க நீங்க...!!!! ❤️❤️
And its time for மூக்குத்தி அம்மன் !?! #MookuthiAmman ❤️?? pic.twitter.com/3ZQcMGWuZh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments