நாளை மூக்குத்தி அம்மனை பார்க்க வைக்க ஆர்ஜே பாலாஜி செய்யும் தந்திரம்: சர்ச்சைக்கு உள்ளாகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தை முழுவதுமாக பார்க்க வைக்க ஆர்ஜே பாலாஜி ஒரு தந்திரம் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படம் வெளியானபோது படத்தின் நீளம் கருதி ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு நீக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் நாளை ஒளிபரப்பாகும்போது இடம்பெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளன என்பதால் புதிய சர்ச்சை உண்டாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த படத்தை முழுவதுமாக பார்த்தால் இந்த படத்தில் உள்ள அன்சீன் காட்சிகளையும் பார்க்கலாம் என ரசிகர்கள் இந்த படத்தை முழுவதுமாக பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்த படம் நாளை தொலைக்காட்சியில் அதிக நபர்களால் பார்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அன்சீன் காட்சிகளை ஓடிடியிலும் இணைக்க ஆர்ஜே பாலாஜி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
#MookuthiAmman premiere on April 14th தமிழ் புத்தாண்டு special on @vijaytelevision .!!! ❤️ #UnseenScene pic.twitter.com/Rv5PJVmCFq
— RJ Balaji (@RJ_Balaji) April 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments