ஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
'மூடர் கூடம்' என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நவீன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த படத்தில் முஸ்லீம் பெண் கேரக்டரில் நடித்திருந்த சிந்து என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு 'மூடர் கூடம்' படம் வெளிவரும் முன்னரே இவர்களது திருமணம் நடந்ததாக அப்போதே செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது பதிவுத்திருமணம் மற்றும் மத நம்பிக்கை குறித்து இயக்குனர் நவீன் தற்போது ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்' என்று பதிவு செய்துள்ளார்.
திருமணம் நடைபெற்று ஆறு வருடங்கள் கழித்து, அதுவும் தேர்தலுக்கு முந்தைய நாள் திடீரென இயக்குனர் நவீன் தனது திருமணத்தையும் மதத்தையும் இணைத்து ஒரு டுவீட்டை ஏன் பதிவு செய்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இயக்குனர் நவீன் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர், விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் நாயகியாக 'அர்ஜூன்ரெட்டி' ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம் pic.twitter.com/F0rpz5Q2n9
— Naveen.M (@NaveenFilmmaker) April 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com