ஜாதி பெருமை பேசிய போஸ்கி.. இயக்குனர் போட்ட டுவிட்..!
- IndiaGlitz, [Sunday,February 05 2023]
நடிகர் போஸ்கி சமீபத்தில் நடந்த விழாவில் ஜாதி பெருமை குறித்து பேசிய நிலையில் அதற்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டரில் பதில் கூறியுள்ளார்.
நடிகர், பத்திரிகையாளர், ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு பணிகளை ஆற்றியவர் போஸ்கி என்பதும் இவர் மொட்டை போஸ்கி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் போஸ்கி, ‘பிராமின் மற்றும் பிரம்மன் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியாக ஒலிக்கிறது. எனவே இரண்டுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என்று நான் பார்க்கிறேன்.
பிரம்மன் எப்படி உயிர்களைப் படைக்கின்றானோ அதேபோல் நாமும் படைப்பாற்றலுக்கு பேர் போன சமூகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நமக்குள் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நமக்குள்ள ஐயர், ஐயங்கார் என்ற சண்டே இருக்கக் கூடாது என்றும் உலகிலேயே புத்திசாலித்தனமான மூளை நம்மிடம் இருப்பதால் நாம் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிராமின் சமூகத்தை பெருமையாக பேசிய போஸ்கி குறித்து நெட்டிசன்கள் பலர் கிண்டலும் செய்து வரும் நிலையில் ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இது குறித்து கூறியிருப்பதாவது:
ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்பதற்கும், மாடர்ன் உடைகள் அணிவதாலேயே ஒருவன் மாடர்ன் நாகரீக சிந்தனை உடையவனாகிவிட முடியாது என்பதற்கும் இந்த காமடி உடையவனாகிவிட உதாரணம். அவர் பேசுவது காமடி இல்லை. அவர்தான் காமடி. #பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்.
இயக்குனர் நவீனின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்பதற்கும், மாடர்ன் உடைகள் அணிவதாலேயே ஒருவன் மாடர்ன் நாகரீக சிந்தனை உடையவனாகிவிட முடியாது என்பதற்கும் இந்த காமடி ஒரு உதாரணம். அவர் பேசுவது காமடி இல்லை. அவர்தான் காமடி. #பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்
— DirectorNaveen (@NaveenFilmmaker) February 4, 2023
pic.twitter.com/2A2dYazxpG