சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் புது புரட்சி… ஏட்டுக் கல்விக்கு மாற்றாக மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்முடைய கல்வி முறையில் அனுபவ அறிவு குறைவாக இருக்கிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற கல்விமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மாண்டிச்சோரி கல்விமுறை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் சிறிய வயதில் இருந்து கொடுக்கப்படும் மாண்டிச்சோரி கல்வி முறைப் படிப்புக்கு உலகம் முழுவதிலும் பெரிய மவுசு இருக்கிறது.
அத்தகைய கல்வி முறை இனி சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகளிலும் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் அதுவும் துவக்கப்பள்ளிகளில் இருந்தே மாண்டிசோரி கல்விமுறை படிப்பு வழங்கப்படும் என்று சென்னை கார்பரேஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு தற்போது சோஷியல் மீடியாக்களில் படு வைரலாகி வருகிறது. இத்தாலி நாட்டைச் சார்ந்த மரியா மாண்டிசோரி என்பவர் கண்டுபிடித்த இந்தக் கல்விமுறையில் ஒரு மாணவர் படிக்க வேண்டும் என்றால் பல லட்சங்களை ஆண்டுதோறும் செலவிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் இந்தக் கல்வி வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து முழுமையான விவரங்களை சென்னை கார்பரேஷன் விரைவில் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டிசோரி கல்விமுறையில் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது கலைகள், விவசாயம், சமையல், தொழில்நுட்பம் என வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுபவம் சார்ந்த இந்தக் கல்விமுறையில் ஒரு மாணவன் படிக்கும்போது மிக எளிதாக அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என கல்வியாளர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் மாண்டிசோரி கல்விமுறை கொண்டுவரப்படுவது குறித்து கல்வியாளர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments