அமெரிக்காவில் குரங்கம்மை நோய் ...! 200 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் சுமார் 200 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மாதத்தின் துவக்கத்தில் நைஜீரியாவில் இருந்து வான்வழிப்பயணம் மூலம் அமெரிக்க வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் நைஜீரியா,லாகோஸ் நகரில் இருந்து அட்லாண்டா வரை வேறொரு விமானத்திலும் பயணம் செய்துள்ளார். தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு, மருத்துவமனையில் சிகிச்சையளித்த நிலையில், தற்போது நலமுடன் உள்ளார். ஆனால் கடந்த 2003-க்குப் பிறகு இந்த தொற்று பாதித்த முதல் நபர் இவர்தான் என்று செய்திகள் கூறுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையம் கூறியிருப்பதாவது, "இந்த தொற்று பாதித்த நபர் இரு விமானங்களில் பயணம் செய்துள்ளார். அதனால் அவருடன் பயணித்த ஒருசில பயணிகளுக்கும் குரங்கம்மை பாதித்திருக்கலாம். முகக் கவசம் அணிந்திருந்தால், நோய் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும். மேலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்களை தேடும் பணியில், உள்ளூர் சுகாதாரத்துறை நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என கவலையுடன் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு குறைவு தான். இந்த நோய் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என கண்காணிக்கப்படும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த தொற்றானது, பெரியம்மையை காட்டிலும் தீவிரம் குறைவாகத் தான் இருக்கும், ஆனால் அரியவகை நோயாக கருதப்படுகிறது. மேற்கு ஆப்ரிக்க நாடுகள் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான், இந்த நோய் பெரும்பாலும் பரவுகிறது.
இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன...?
குரங்கம்மை நோயின் முதல் தாக்குதலாக காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசைவலி உள்ளிட்ட உடல்நலக் குறைப்பாடுகள் ஏற்படும்.
இதையடுத்து முகத்தில் சொறி வரத் துவங்கி, மற்ற உடல் பாகங்களுக்கு பரவுகிறது. குறிப்பாக உள்ளங்கை மற்றும் காலின் பாதங்களில் பரவத்துவங்கும். உங்கள் உடலுக்கு இது நமைச்சலை உண்டாக்கும், உடலில் அம்மைப்போன்று உண்டாகி, உதிர்ந்து விடும். இது நாள்கணக்கில் தழும்புகளை உண்டாக்கும்.
இந்நோய் தீவிரமாக இல்லையெனிலும், சின்னம்மை போல தோன்றி, சில நாட்களில் குணமாகி விடும். ஆனால் 100-இல் 1 நபருக்கு இது தீவிர நோயாக மாறக்கூடும். சென்ற வருடம் பிரிட்டனைச் சேர்ந்த 3 நபர்களுக்கு, குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments