கேரள இளைஞருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு…
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
பருவகால காய்ச்சல் நோயாகக் கருதப்படும் குரங்கு காய்ச்சல் நோய் இந்த வருடத்தில் முதல் முறையாக கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பே இந்நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் வயநாட் மாவட்டம் திருநெல்லி அடுத்த பனவல்லி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து அந்த இளைஞர் மானந்தவாடி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கேரளச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout