சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சின்னு நம்பவே இல்ல - மோனிஷா

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

சமூக வலைத்தள பிரபலமும் நடிகையுமான மோனிஷா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதனை அடுத்து அவர் நமக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார் . நடிகை மோனிஷா அவர்களிடம் வெள்ளி திரையில் அறிமுகமாக போகிறீர்கள் இந்த அனுபவம் எப்படி உள்ளது ?என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை மோனிஷா அவர்கள் அதை நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது .

எல்லா கலைஞர்களும் வெள்ளி திரையில் வரவேண்டும் என்பதர்காகவே உழைகின்றனர் .அது உண்மையாலும் நடக்க போகிறது என நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது என்று பதில் கூறினார்.பின் உங்களுக்கு எந்த மாதிரியான நடிகையாக வர வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை மோனிஷா அவர்கள் எனக்கு நல்ல குணச்சித்திர நடிகையாக வர வேண்டும் என்று பதில் கூறினார் .