குப்பையில் வீசப்பட்ட ஒன்றரை லட்ச ரூபாய்... அதற்கு பின் நடந்த பெரிய டிவிஸ்ட்!!!

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

 

இலங்கை நாட்டில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஒரு கணவன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அதனால் பெற்றப்பட்ட பணத்தை ஒரு கவரில் சுற்றில் தன்னுடைய வீட்டின் டேபிள் மேல் வைத்து இருக்கிறார். ஆனால் கவரில் இருப்பது பணம் என்று தெரியாத அவரது மனைவி அந்தக் கவரை குப்பையோடு குப்பையாக தூக்கி மாநகர குப்பை சேகரிப்பாளரிடம் கொடுத்து விட்டார். இதை அறிந்ததும் அதிர்ந்து போன அந்த கணவர் உடனே மாநராட்சிக்கு தொடர்பு கொண்டு பதட்டமாகப் பேசி இருக்கிறார்.

இந்நிகழ்வு நேற்று காலை 11.30 மணிக்கு இலங்கையின் கன்முனை பகுதியில் நடைபெற்று இருக்கிறது. உடனடியாக இந்தச் சூழலைப் புரிந்து கொண்ட அம்மாநகராட்சி அதிகாரி அப்பகுதியில் குப்பை சேகரித்தவரைத் தொடர்பு கொண்டு குப்பை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார். பின்பு குப்பை எடுத்துச் சென்ற வேனையும் ஒருவழியாக நிறுத்தி விட்டனர்.

இந்நேரத்தில் பணத்தை பறிக்கொடுத்த தம்பதியினரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் ஏரியா முழுக்க சேகரிக்கப்பட்ட அந்தக் குப்பை வண்டியை பார்த்தும் நம்பிக்கை இல்லாமல் அந்த தம்பதிகள் மலைத்துப்போய் நின்றனர். ஆனால் நிலைமையை புரிந்து கொண்ட துப்புரவு தொழிலாளிகள் வெறும் 45 நிமிடத்தில் ஒட்டு மொத்த வேனையும் அலசி ஆராய்ந்து ஒரு வழியாக பணக்கவரை கண்டுபிடித்து விட்டனர்.

இதனால் நெகிழ்ந்து போன அந்தம்பதி துப்புரவுத் தொழிலாளிகளுக்கு சிறிய தொகையைக் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளாத அத்தொழிலாளிகள் பெருந்தன்மையோடு திரும்பி காட்சி பெரும் வியப்பை ஏற்படுத்தியது.