'மணி ஹெய்ஸ்ட்' ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அளவில் பிரபலமான வெப்தொடர் 'மணி ஹெய்ஸ்ட்’ என்பதும் இந்த வெப்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் என்பதும் தெரிந்தது. அதே போல் தமிழகத்திலும் இந்த வெப்தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
இந்த தொடரின் கதாநாயகனான புரபொசர் கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர் யார் என அஜித் விஜய் ரசிகர்களிடையே பெரிய போரே சமூகவலைதளத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'மணி ஹெய்ஸ்ட்’ வெப்தொடரை தொடர்ந்து பார்த்து ரசித்து வரும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு தற்போது ஒரு சர்ப்ரைஸ் செய்தி வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் நெடிபிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அறிவிப்பையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே விரைவில் 'மணி ஹெய்ஸ்ட்’ தொடரை தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தொடரில் டோக்கியோ, நைரோபி, பெர்லின், ரியோ, டென்வர் ஆகிய நகரங்களின் பெயர்களாகவே கேரக்டர்களின் பெயராக இருக்கும். அதை தமிழில் டப் செய்யும் போது தமிழகத்தில் உள்ள நகரங்களின் பெயர்களை வைப்பார்களா? அது பொருத்தமாக இருக்குமா? அல்லது காமெடியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Yes, Money Heist is now streaming with Tamil and Telugu audio.
— Netflix India (@NetflixIndia) February 26, 2021
No, Tokyo is not Tirunelveli and Nairobi is not Nellore.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout