'இந்தியாவுக்கு வருகிறேன்': 'மணி ஹெய்ஸ்ட்' குழுவினர் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களால் விருப்பத்துடன் பார்க்கப்படும் வெப்சீரிஸ் என்றால் அது ‘மணி ஹெய்ஸ்ட்’என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரின் ஐந்தாவது சீசனின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த தொடர் முடிந்து விட்டதே என்ற கவலை பலருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் இந்த தொடர் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் இந்தியாவில் தான் மிக அதிக பார்வையாளர்கள் இத்தொடருக்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றி கூறிய ‘மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் புரபொசர் கேரக்டரில் நடித்த அல்வாரோ மோர்ட்டி பேசியபோது ’இந்தியாவில் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரை மாபெரும் ஹிட் ஆக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும், இந்த தொடர் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இந்த தொடரில் நடித்தவர்கள் ஒவ்வொருவராக நன்றி தெரிவிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.
மேலும் இன்னொரு வீடியோவில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்த ஹெலன்ஸ்கி, ‘கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்றும் குறிப்பாக கோவாவுக்கு வர வேண்டும் என்று எனக்கு ஆசை’என்றும் தெரிவித்தார். இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com