சாதாரணமாக நினைக்க வேண்டாம்: கொரோனாவில் இருந்து மீண்ட மணிஹெய்ஸ்ட் நடிகை

மணி ஹெய்ஸ்ட் (Money Heist) என்ற உலகப்புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ (Itziar Ituño). இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். இதுகுறித்து அவர்தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முதலில் சாதாரண இருமலாக தொடங்கிய இந்த கொரோனா பாதிப்பு, மறுநாளே பலமான காய்ச்சலில் கொண்டு தள்ளிவிட்டது. இந்த கொரோனாவால் 15 நாட்கள் நுகரும் தன்மையே இழந்துவிட்டேன். இது சாதாரண தொற்று இல்லை. மிகவும் மோசமானது. கொரோனா தொற்று நம்மை தாக்கி விட்டால் அதனால் ஏற்படும் உடல் பாதிப்பை விட மனதளவில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.

எனவே கொரோனாவை யாரும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்., இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் இந்த கொரோனா உலகையே ஆட்டி வைத்து வருகிறது. இதனை நான் உங்களை மக்களை பயமுறுத்துவதற்காக கூறவில்லை. இந்த வைரஸை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்கள் மற்றும் அரசாங்கம் சொல்வதை தயவு செய்து பின்பற்றுங்கள்’ என்று இட்ஸியார் இட்னோ கூறியுள்ளார்.

More News

ஏடிஎம்-இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா என்ற பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் நேற்று ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது இன்று கண்டறியப்பட்டது.

வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்: வைரலாகும் வடிவேலு வீடியோ

கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கொரோனாவுக்கு 4 முக்கிய தடுப்பூசிகள்: எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா???

தற்போதைய நிலைமைக்கு உலக மக்களின் ஒரே எதிர்ப்பார்ப்பாக இருப்பது கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே.

செல்பி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

தமிழக மக்களும், மற்றும் தேமுதிகவினர் அனைவரும், அவரவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முககவசத்தின்

ராகவா லாரன்ஸூக்கு சைகை மொழியில் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி பெண்

தென்னிந்திய திரையுலகில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே