மினி லாரியில் கேரளா டூ தூத்துக்குடி சென்ற பணம்...!
- IndiaGlitz, [Thursday,March 25 2021]
கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு மீன்வாங்க மினிலாரி மூலம் வந்த வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-6 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மக்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இதற்காக நெல்லை மாவட்டம், பழைய பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயத்தில் அண்டை மாநிலமான, கேரளா, கொட்டாரக்கரையிலிருந்து தூத்துக்குடிக்கு மீன் வாங்க வந்த மினிலாரியை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்து பார்த்தனர். அந்த லாரியில் சசூருதீன் என்பவரிடம் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து நாற்பத்தி நான்காயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பின் அந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பணத்தை வருவாய் துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். ஆதாரத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் அவர்களிடம் கூறினார்.