ஆண்களின் மச்சங்களில் உள்ள சுவாரசியமான தகவல்கள்....! நீ மச்சக்காரன்டா....?
Send us your feedback to audioarticles@vaarta.com
உடலில் மச்சங்கள் உள்ள இடங்களை வைத்து அவர்கள் அதிர்ஷ்டசாலியா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. நம்மில் பலரும் ஆண்களை பார்த்து, பெண் தோழிகள் அதிகம் இருந்தாலோ, காதல் வயப்பட்டாலோ 'நீ மச்சக்காரண்டா' என கிண்டலடித்திருப்போம். ஆனால் அதில் சிறு பொறாமையும் இருக்கும் என்பது நமதளவில் தெரிந்த உண்மை. நம் உடலில் இருக்கும் மச்சங்கள் அதிர்ஷ்டத்தை தருமா...?துர்அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா...? என்பதை முதன்மையாக வைத்து எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம். ஆண்களின் உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் நன்மை மற்றும் தீமையானது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
மச்சம் என்பது,
ஒரு மனிதனின் தலைப்பகுதி முதல் கால்பாதங்கள் வரை, சதை மூடியுள்ள பகுதிகளில், தோலின் மேல் தோன்றும் கருப்பு நிற புள்ளிகள் மச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மஞ்சள், நீலம் , சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கும். இவை கடுகு அளவு முதல் வெவ்வேறு அளவில் இருக்கலாம், சரி ஆண்களுக்கும், அவர்களின் உடலில் உள்ள மச்சங்களில் உள்ள அதிர்ஷ்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆண்களுக்கு வலது புருவத்தில் மச்சம் உண்டெனில், அவர்களுக்கு அதிர்ஷகரமான மனைவி அமைவார்களாம். இரண்டு புருவங்களுக்கு இடையில் இருப்பில், எதிர்பாராத செல்வங்கள் கிடைக்கலாம்.
பொட்டு வைப்பதற்கு, வலது பக்கத்தில் மச்சம் இருப்பின், செல்வமும், புகழும் எதிர்பாராமல் கிடைக்கும்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களுக்கு, நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவே வலது கண்ணில் இருந்தால், உறவுகள் மூலம் அவர்களுக்கு புகழ் தேடி வரும்.
ஆண்களுக்கு தொப்புளின் மேல் மச்சம் இருப்பின், வசதியான வாழ்க்கை கொண்டவனாக இருப்பான். வயிற்றுப்பகுதியில் மச்சம் உள்ளவர்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்களாகவும், வயிற்றின் இடப்புறம் இருந்தால் உழைத்து வாழ எண்ணமுடையவர்களாகவும், நல்ல குணங்களையும் பெற்றிருப்பார்கள்.
வலது தோள்பட்டையில் மச்சம் உள்ள ஆண்கள், சிறிய விஷயத்திற்கு கூட, சற்று அதிகமாகவே மனதை அலட்டிக் கொள்வார்கள்.
மார்பின் வலது பகுதியில் மச்சம் இருக்கும் ஆண்களின் வாழ்க்கை, சற்று நடுத்தரமாகவே அமையும், ஆனால் குழந்தை பாக்கியம் நன்றாக கிடைக்கும்.
மூக்கின் வலது பக்கம் மச்சம் உள்ள ஆண்கள் நினைத்ததை, சாதித்து முடிப்பார்கள். மூக்கின் மேல் பகுதியில் இருந்தால், அனைத்து சவுகரியங்களையும் வாழ்க்கையில் பெற்றவர்களாக இருப்பார்கள்.
தொண்டையில் மச்சமுள்ள ஆண்களுக்கு, திருமண வாழ்க்கையின் மூலம் நல்ல சொத்து கிடைக்கும். இதுவே கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால், உறவினர்களான பங்காளிகள் வழியாக புகழ், சொத்து, நற்பெயர் போன்றவை கிடைக்கும்.
இடது புருவத்திலும், இடது கண் வெண்படத்திலும் மச்சமுள்ள ஆண்களின் வாழ்க்கை கஷ்டத்துடனும், வறுமையுடனும் இருக்கும். ஆனாலும் அதை சமாளிக்கும் பக்குவம் அவர்களிடம் இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments