'வலிமை' அப்டேட்டை என்னால் மறக்க முடியாது: மொயின் அலி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய போது ரசிகர்கள் என்னிடம் ’வலிமை’ அப்டேட் கேட்டதை என்னால் மறக்க முடியாது என நேற்று ஓய்வை அறிவித்த மொயின் அலி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் மொயின் அலி என்பது தெரிந்ததே. 34 வயதான மொயின் அலி நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் நேற்று அவரது பேட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது
அந்த பேட்டியில் அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி விளையாடிய போது திடீரென ரசிகர் ஒருவர் என்னை அழைத்து ’வலிமை’ அப்டேட் கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று கூறினார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், ‘அப்பவே சொன்னேன்’ என்று சிரிக்கும் பொம்மைகளை பதிவுசெய்துள்ளார்.
மேலும் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டி தனக்கு மிகவும் பிடித்த போட்டி என்று கூறிய மொயின் அலி, அந்த டெஸ்ட் போட்டியை ரசித்து விளையாடியதாக கூறினார். மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி ஒன்றில் அரைசதம் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Moments of awesomeness in Mo's words!
— Chennai Super Kings - Mask P??du Whistle P??du! (@ChennaiIPL) September 27, 2021
Read ➡️ https://t.co/8jdQsiq8Wo#WhistlePodu #Yellove ???? pic.twitter.com/l0pcC2sc9c
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments