த்ரிஷாவின் 'மோகினி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

பிரபல நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த 'மோகினி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷாவின் வித்தியாசமான நடிப்புக்காக இந்த படத்தை பார்க்கலாம் என்று பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன

இந்த படம் சென்னையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 15 திரையரங்குகளில் 166 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.48,66,593 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சராசரி ஓப்பனிங் வசூலை பெற்றிருந்தாலும் இன்று முதல் வசூலாகும் தொகையை பொறுத்தே இந்த படம் வெற்றிப்படமா? என்பது உறுதி செய்யப்படும்.