மோகினி படத்தில் 55 நிமிடங்கள் கிராபிக் காட்சிகள்: இயக்குனர் மாதேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு திரைப்படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி நேரம் என்று இருக்கும் நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளது த்ரிஷாவின் திகில் படமான மோகினி' இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது:
என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. திகில் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. "காதலன்" படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இணைத்து கொள்ள முடியும். படத்தில் பூர்னிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் சுரஷே் போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார் கூறியபோது, 'தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம், என் பெயர் லக்ஷ்மன் குமார் - ப்ரின்ஸ் பிக்சரின் உரிமையாளர் சிங்கம் 2 தயாரிப்பிற்கு பிறகு தற்போது “மோகினி” படத்தை தயாரிக்கின்றோம். படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சென்சாருக்கு தயாராக உள்ளது. மோகினி திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக திகில் படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் Visual Effects மிக அருமையாக வந்துள்ளது. மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம். இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. அதை நாம் டிரைலரிலே பாத்திருப்போம். ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com