மோகினி படத்தில் 55 நிமிடங்கள் கிராபிக் காட்சிகள்: இயக்குனர் மாதேஷ்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

ஒரு திரைப்படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி நேரம் என்று இருக்கும் நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளது த்ரிஷாவின் திகில் படமான மோகினி' இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது:

என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. திகில் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலன் படத்தில் முக்காலா  முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இணைத்து கொள்ள முடியும். படத்தில் பூர்னிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் சுரஷே்  போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார் கூறியபோது, 'தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம், என் பெயர் லக்ஷ்மன் குமார் - ப்ரின்ஸ் பிக்சரின் உரிமையாளர் சிங்கம் 2 தயாரிப்பிற்கு பிறகு தற்போது “மோகினி” படத்தை தயாரிக்கின்றோம். படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சென்சாருக்கு தயாராக உள்ளது. மோகினி திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார்  என்னிடம் கூறும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக திகில் படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டினுள்  அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55  நிமிடங்கள் வரும் காட்சிகளில் Visual Effects மிக அருமையாக வந்துள்ளது. மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம்.  இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. அதை நாம் டிரைலரிலே பாத்திருப்போம். ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என்று கூறியுள்ளார்.

 

More News

முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பில் உருவான முதல் படம்

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள் ) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப்பட்ட முதல் படம் இந்த பக்கா.

இன்று முதல் தொடங்கும் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி அறிவித்த முதல்கட்ட நிர்வாகிகள் லிஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்: ரசிகர்களிடம் கமல்ஹாசன் விளக்கம்

நாட்டில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை. அவற்றை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் தளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தவருமான பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன்