சாமிய காப்பாற்ற யார் இருக்கா? பிரபல இயக்குனரின் 3 வயது மகள் கேள்வி

ஒரு காலத்தில் மதமும் ஆன்மீகமும் மனிதனை நல்வழிப்படுத்த இருந்த நிலையில் தற்போது ஆன்மீகம் என்ற பெயரில் மதக் கலவரங்களும், மத பிரச்சனைகளை சீண்டிவிட்டு அரசியல் செய்வதுமான செயல்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.

மனிதர்களை சாமிகள் காப்பாற்றி நிலை மாறி தற்போது சாமியின் சிலைகளையும் சாமியின் பாடல்களையும் மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் தனது மூன்று வயது மகள் ‘சாமியை காப்பாற்ற யார் இருக்கா? என்று எழுப்பிய கேள்வி குறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அன்று, மூன்று வயது நிரம்பிய என்‌ மகளுக்கு சாமி கும்பிட கற்றுக்கொடுத்தோம்‌. கடவுளைப்பார்த்து இரு கரம்‌ கூப்பி, அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, எல்லாரும்‌ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கமா என்றோம்‌. அவளும்‌ சொல்லிக்கொடுத்தது போலே அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, தாத்தா நல்லா இருக்கணும்‌, பாட்டி நல்லா இருக்கணும்‌, அத்தை மாமா நல்லா இருக்கணும்‌, சித்தப்பா நல்லா இருக்கணும்‌' என கூறி தொடர்ச்சியாக சொல்லாத ஒன்றையும்‌ கூறினாள்.‌

'சாமி நல்லா இருக்கணும்‌: சரி தானே ! நம்மை காப்பாற்ற சாமி இருக்கு நம்மிடமிருந்து சாமியை காப்பாற்ற யார்‌ இருக்கா ?

இயக்குனர் மோகன்ராஜாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

குழந்தையில்லா தாய்மார்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்த கொரோனா: ஆச்சரிய தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் மனித இனமே அச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன.

கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகளின் குடும்பத்தினருடன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார் என்பதும், மாஸ்க் அணிந்து லம்போர்கினி

மக்களே உஷாரா இருங்க… இந்தவகை மாஸ்க் எதுக்கும் உதவாது!!! எச்சரிக்கும் மத்தியச் சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

மகாராஷ்டிர மாநிலம் பூனே அடுத்த பிரிம்பிஹான் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது

கந்தனுக்கு அரோகரோ: கந்தசஷ்டி விவகாரத்திற்கு குரல் கொடுத்த ரஜினி

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது