வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல்… புதிய சாதனை படைத்த மரைக்காயர் திரைப்படம்!
- IndiaGlitz, [Wednesday,December 01 2021]
நடிகர் மோகன்லால் நடிப்பில் நாளை (டிசம்பர் 2) வெளியாகவுள்ள திரைப்படம் “மரைக்காயர்- அரபிக் கடலின்டே சிம்ஹம்“. இந்தப் படம் முன்பதிவில் ரூ.100 கோடியை வசூலித்து உள்ளதாகப் படக்குழு விளம்பரம் செய்திருக்கிறது. இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த குஞ்சாலி எனப்படும் மரைக்காயர் வம்சத்தை சேர்ந்த நடிகர் மோகன்லால் வெள்ளையர்களுக்கு எதிராக படைத்திரட்டி போர்த்தொடுக்கிறார். கடலுக்கு நடுவே பெரும்பாலான காட்சிகள் இடம்பெறும் இந்தத் திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஆண்டனி பெரும்பாகூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் மோகன் லால், நடிகை கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷ்ன், பாசில், சித்திக், நெடுமுடி வேணு, இன்னோசெண்ட் போன்றோர் நடித்துள்ளனர். ஏற்கனவே 3 தேசிய விருது 3 கேரள விருதுகளை குவித்து இருக்கும் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் நாளை திரைக்கு வருகிறது.
இதையடுத்து படக்குழு வெளியிட்டு இருக்கும் விளம்பரப் படத்தில் வெளியீட்டிற்கு முன்பே மரைக்காயர் திரைப்படம் ரூ.100 வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 5 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் திரைக்கு வருகிறது. அந்த வகையில் 4,100 திரையரங்கில் திரையிடப்படும் மரைக்காயர் திரைப்படம் தினமும் 16,000 காட்சிகள் காட்டப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
നാളെ ചരിത്ര ദിവസം കുഞ്ഞാലിയുടെയും മലയാള സിനിമയുടെയും #MarakkarFromDec2
— Mohanlal (@Mohanlal) December 1, 2021
Worldwide releasing in 4100 screens with 16000 shows per day.#MarakkarArabikadalinteSimham#MarakkarLionoftheArabianSea pic.twitter.com/BvWS0BeBU0