வீட்டில் யானை தந்தங்கள்… பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம்வரும் நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள வீட்டில் ஒரு ஜோடி யானை தந்தங்களை அந்த அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இதுதொடர்பான ஆவணங்களை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பெரும்பாவூர் வனத்துறை அதிகாரிகள் நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பாக பெரும்பாவூர் முதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில் கேரள அரசு நடிகர் மோகன்லால் மீதான இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்கிற ரீதியில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்குச் சாதகமாக கேரள அரசு அளித்திருக்கும் மனுவை எதிர்த்து ஜேம்ஸ் மேத்யூ, ஏ.ஏ.புவலோஸ் எனும் இருநபர்கள் புது மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நேற்று பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசு சமர்பித்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் யானை தந்தங்கள் கைப்பற்றபட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் கேரள சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com