'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் கேரக்டர் என்ன? அவரே அளித்த தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களது காட்சி டிரைலரில் இல்லை என்பதால் அவர்களுக்கான கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸ் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஜாக்கி ஷெராப் இந்த படத்தில் மெயின் வில்லனாகவும், சுனில் ஒரு இன்னொரு வில்லனாகவும் நடித்திருப்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் கேரக்டர்களின் சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மோகன்லால் ’ஜெயிலர்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து கூறிய போது ’ஒரு சுவாரசியமான படத்தில் எனது கேரக்டர் ஒரு சுவாரசியமாக இருக்கும் என்று ஆனால் அது என்ன கேரக்டர் என்பதை படம் ரிலீஸ் வரை சஸ்பென்ஸ் ஆக இருப்பது தான் நல்லது என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது கேரக்டரின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏற்கனவே சிவராஜ்குமார் பேட்டி ஒன்றில் தான் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே இந்த படத்தில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.