அஜித் போன்று அரசியல் அறிக்கை விட்ட சூப்பர் ஸ்டார்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பகிரங்க அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டு தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக்கினார்.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் திருவனந்தபுரம் உள்ளிட்ட எந்த தொகுதி வேண்டுமானாலும் அவருக்கு அளிக்க தயார் என்றும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் உலா வந்தன.
ஆனால் பாஜக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதுமட்டுமின்றி அரசியலில் ஈடுபடும் எண்ணமே தனக்கு இல்லை என்றும் நடிகர் மோகன்லால் அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார். அஜித் போலவே தனது அரசியல் நிலையை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியதற்கு மோகன்லாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com