மோகன்லாலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

  • IndiaGlitz, [Saturday,October 15 2016]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. கேரளாவில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஐந்து நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் இந்த படம் தற்போது சீன, வியட்நாம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் ரிலீஸ் ஆன மோகன்லாலின் 'ஒப்பம்' இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 'புலிமுருகன்' திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால் மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.

More News

சிவகார்த்திகேயன் பின்பற்றும் நான்கு ரூல்ஸ்கள்

பத்து படங்கள் மட்டுமே நடித்த ஒருவர் மாஸ் நடிகர் பட்டியலில் இணைந்திருக்கும் அதிசயம் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது

ஹீரோவாக நடிப்பது எப்போது? அனிருத் பதில்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறும் சீசன் நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கோலிவுட் நட்சத்திரங்கள்?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்பு சட்டை' லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான மனோபாலா தயாரித்த முதல் படமான 'சதுரங்க வேட்டை' ஒரு நல்ல மெசேஜ் உடன் கூடிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில் அவர் தயாரித்த இரண்டாவது படமான 'பாம்புச்சட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.