சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாக டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன 'லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாக டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் மோகன்லால்-பிரித்விராஜ் கூட்டணி மீண்டும் இணைகிறது

மோகன்லால், மஞ்சுவாரியர், விவேக் ஓபராய், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்த 'லூசிஃபர் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டானது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.175 கோடி வசூலாகியது

நடிகர் பிரித்விராஜ் இயக்கிய முதல் படமான இந்த படம் ஒரு அரசியல் ஆக்சன் படமாகும். ஒரு மாநில முதல்வர் திடீரென காலமான பின்னர் அவரது வளர்ப்பு மகனும், மருமகனும் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை

இந்த நிலையில் 'லூசிஃபர் படத்தின் வெற்றிக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வேண்டும் என்று மோகன்லாலில் ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'எம்புரான்' (EMPURAAN ) என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் ஆகும். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது
 

More News

விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம்: சேரன்

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில்

நிர்வாண புகைப்பட விவகாரம்: மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை!

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடிகை ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

'கூர்கா' பட விழாவில் பாஜகவை கிண்டலடித்த கரு.பழனியப்பன்

யோகிபாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார்.

'ஆடை' டீசரில் அமலாபாலின் தைரியம்: அதிர்ச்சி காட்சிகள்

அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' சென்சார் தகவல்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்