பாக்ஸிங் கேரக்டருக்காக பயிற்சி எடுக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடுவார் என்பது அந்த திரைப்படத்தில் உள்ள கேரக்டர் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கும் அவர் தீவிரமாக பயிற்சி எடுப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனால்தான் அவரது ஒவ்வொரு படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பாக்ஸிங் கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் மோகன்லால் பாக்ஸராக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மோகன்லால் இந்த படத்தில் நிஜமாகவே பாக்ஸராக மாறும் வகையில் தற்போது பாக்ஸிங் பயிற்சி எடுத்து வருகிறார்.இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
மோகன்லாலுக்கு தற்போது 61 வயது ஆகி வந்த போதிலும் அவர் தீவிரமாக பயிற்சி எடுப்பதை பார்க்கும்போது அவர் இன்னும் இளம் நடிகருக்கு சவாலாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
This man continues to amaze me with his dedication. @Mohanlal gearing up to play a retired boxing champion in Priyadarshan’s next. #Mohanlal
— Haricharan Pudipeddi (@pudiharicharan) November 10, 2021
pic.twitter.com/wVPekJXZ8i
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments