துபாயில் சஞ்சய்தத்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பதும் அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது சஞ்சய்தத் துபாயில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் துபாயில் அவரை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மோகன்லால் தற்போது ’த்ரிஷ்யம் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே துபாயில் இருக்கும் மோகன்லால் நேற்று தீபாவளியன்று நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து அவருக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். சஞ்சய் தத்தும் மோகன்லாலுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய்தத், மோகன்லால் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது மோகன்லால் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் போது துபாயில் தான் இருந்தார் என்பதும் அவர் ஐபிஎல் புதிய அணியை வாங்குவதற்காக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

கார்த்தியின் அடுத்த பட பூஜை: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரயில்வே தண்டவாளத்தில் வேகமாக வந்த கார்: போதையில் இளம்பெண் செய்த அட்டகாசம்!

25 வயது இளம்பெண் ஒருவர் போதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை மிக வேகமாக ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

உங்ககிட்ட இருந்து நான் கத்துகிடனும்: சனம்ஷெட்டியை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கே அறியாமல் கலாய்த்து அந்த தவறை உணர்த்தும் வல்லமை படைத்தவர் கமலஹாசன் என்பதை கடந்த நான்கு சீசன்களில் நாம் பார்த்து வருகிறோம்.

சூரறைபோற்று பாணியில் ஒரு தனியார் விண்கலம்… தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில்!

விலை மலிவான விமான போக்குவரத்து எனும் கேப்டன் கோபிநாத்தின் கனவுத் திட்டத்தைத்தான் சூரரைப் போற்று திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

தேன்மொழி சீரியல் நடிகர் கொலை: நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமா?

'கலக்கப்போவது யாரு' புகழ் ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நேற்று சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்