'த்ரிஷ்யம்' - 'முத்தின கத்தரிக்கா' படங்களுக்குள் என்ன கனெக்சன் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லான், மீனா நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் கமல், கெளதமி நடிப்பில் வெளிவந்த இந்த படத்தின் ரீமேக் 'பாபநாசம்' திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்நிலையில் மோகன்லால்-மீனா ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இந்த படத்தை 'பிரபல இயக்குனர் ஜிபுஜாகேப் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய 'வெள்ளிமூங்கா'தான் சமீபத்தில் தமிழில் ரீமேக் ஆகி 'முத்தின கத்தரிக்கா' என்ற பெயரில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், மீனா, ஜிபுஜாகேப் ஆகிய மூவரும் இணையும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.