இன்னொரு 'த்ரிஷ்யம்' ஆகிறது மோகன்லாலின் 'புலிமுருகன்'

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் அல்லது டப்பிங் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மோகன்லாலின் 'த்ரிஷயம்' கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது போல இந்த படமும் ரீமேக் செய்யபடவுள்ளதாகவும், இந்த படத்தின் அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமையையும் மிகப்பெரிய தொகை கொடுத்து அபிஷேக் பிலிம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மிக விரைவில் தமிழ் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்தது போல் 'புலிமுருகன்' தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா

'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் விஜய்-அட்லி மேஜிக். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் அட்லியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கீர்த்திசுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

'ரெமொ', 'பைரவா' நாயகி கீர்த்திசுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.