விஜய்யை அடுத்து இளம் தலைமுறை சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் மோகன்லால்

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

கடந்த ஆண்டு வெளியான 'ஜில்லா' படத்தில் இளையதளபதி விஜய்யின் தந்தையாக நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கும் தந்தையாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் கொரட்டாலா சிவா, 'ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தில் மோகன்லால் அவருக்கு தந்தையாக நடிக்கவில்லை என்றும், மாமாவாக நடிக்கவுள்ளார் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த படத்தில் மோகன்லாலின் கேரக்டர் மிகவும் முக்கியத்துவமானது என்றும், ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டருக்கு சமமான பவர்புல் கேரக்டர் என்றும் கொரட்டலா சிவா கூறியுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கு 'புலி' புகழ் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும், திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த படத்தின் நாயகிகளாக இரண்டு பிரபல நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.