மோகன்லாலின் "பரோஸ்" ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமிழ் டிரைலர் எப்போது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மோகன்லாலின் " பரோஸ்" திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது என்றும், அதுமட்டுமின்றி இந்த படத்தின் தமிழ் டிரெயலர் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரமாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
மலையாளத் திரையுலகின் முன்னனி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அனைத்தும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக, முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் தமிழ் டிரைலர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments