மோகன்லாலின் 'மரைக்காயர்': இவ்வளவு சீக்கிரம் டிஜிட்டல் ரிலீஸா?
- IndiaGlitz, [Monday,December 13 2021]
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ‘மரைக்காயர்’ என்பதும் இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகி 11 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மோகன்லாலின் ‘மரைக்காயர்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரிலீசாகி 15 நாட்களில் டிஜிட்டலில் ‘மரைக்கார்’ திரைப்படம் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகன்லால், அர்ஜூன், சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், ஃபாசில், சுஹாசினி உள்பட பலர் நடித்த இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.