21 வருடங்கள் கழித்து தெலுங்கில் ரீ- எண்ட்ரி ஆகும் மோகன்லால்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்த 'ஜில்லா' திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் பெற்றதை சமீபத்திய செய்திகளில் பார்த்தோம். மோகன்லால் தன்னுடைய 37 வருட திரையுலக பயணத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு நேரடி தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய 'காந்தீபம்' என்ற தெலுங்கு படத்தில் இயக்குனர் பிரியதர்ஷனின் வேண்டுகோளுக்காக அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
அதன்பின்னர் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்தாலும், தெலுங்கில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார். சுரேஷ் வம்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள Nuvve Na Pranamani' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூரஜ், கவிதா ராதேஷ்யம் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ள இந்த படத்தில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். ஜில்லா' படத்தில் மோகன்லால் நடிப்பிற்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், அவரை இந்த படத்தில் நடிக்க தாங்கள் கேட்டுக்கொண்டதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout