சூர்யா படத்திற்காக அடுத்தகட்ட பணியை தொடங்கிய மோகன்லால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்திரகாந்த் வர்மா என்ற இந்திய பிரதமர் கேரக்டரில் நடித்துள்ள மோகன்லால் தனது தனது கேரக்டருக்கான டப்பிங் பணியை இன்று முதல் தொடங்கி உள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாளில் தனது டப்பிங் பணியை முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
மோகன்லாலை அடுத்து மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் படத்தொகுப்பு பணி, கிராபிக்ஸ் காட்சிகளின் பணியும் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் சூர்யா, ஆர்யா , சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், பூர்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த அரசியல் த்ரில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments