எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் மோகன்லால்-ஸ்ரீதேவி?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

தென்னிந்திய திரையுலகின் பெருமையை உலகம் முழுவதற்கும் எடுத்து சென்ற பெருமை பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உண்டு. அவருடைய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்கள் உலகளாவிய வெற்றியை பெற்று தென்னிந்திய சினிமாவுக்கு கெளரவம் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும், அவருடைய அடுத்த படத்தின் நாயகன், நாயகி யார்? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்கள் ராஜமெளலியின் அடுத்த பட நாயகன் பட்டியலில் இருக்கும் நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் அவருடைய அடுத்த ஹீரோ என்று கூறப்படுகிறது.

மேலும் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் 'சிவகாமி' கேரக்டரை மிஸ் செய்த ஸ்ரீதேவி இந்த படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.